நிலநடுக்கம் தொடர்பாக வெளியான படம் 
உலகம்

நேபாளத்தில் நிலநடுக்கம் - டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு

செய்திப்பிரிவு

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது.

இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''நேபாளத்தில் இன்று மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜூம்லா மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக டெல்லியிலும், ராஜஸ்தானிலும், வடக்கு உத்தரப் பிரதேசத்திலும், உத்தராகண்ட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்கள் என கட்டிடங்களுக்குள் இருந்த பலர், அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து வெளியே வந்துள்ளனர்.

SCROLL FOR NEXT