காஸாவில் அமைதி நிலவ வேண்டி அங்குள்ள முஸ்லிம்கள் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகை நடத்தி வருகின்றனர்.
காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருவதால் காஸா நகரில் உள்ள புனித போர்பைரியஸ் தேவாலயத்தில் ஏராளமான பாலஸ்தீனர்கள் தஞ்ச மடைந்துள்ளனர். அவர்கள் தேவாலயத்திலேயே தொழுகை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மெஹ்மூத் காலப் என்ற பாலஸ்தீனர் கூறியது:
இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து தேவாலயத்தில் தஞ்ச மடைந்துள்ளோம். இங்குள்ள வர்கள் எங்களை தேவாலயத்துக் குள் தொழுகை நடத்த அனுமதித் துள்ளனர். இது கிறிஸ்தவர்கள் குறித்த எங்களின் எண்ணத்தை மாற்றியுள்ளது. இப்போது அவர்கள் எங்கள் சகோதரர்கள். தேவாலயத் தில் தொழுகை நடத்துவேன் என்று இதற்கு முன்பு நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. இங்கே கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இடையே நட்பு மலர்ந்துள்ளது. இங்குள்ளவர்கள் எங்களுக்கு விருப்பத்துடன் அடைக்கலம் தந் துள்ளனர். நாங்கள் ரமலான் நோன்பு இருப்பதால் எங்கள் முன்பு இங்குள்ள கிறிஸ்தவர்கள் எங்கள் முன்பாக சாப்பிடுவது கூட இல்லை. அவர்களுக்கு நன்றி என்றார். சுமார் 500 முஸ்லிம்கள் இந்த தேவாலய வளாகத்தில் தங்கியுள்ளனர்.