இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீர்ர்களின் நினைவிடமான பேர்ல் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்த ஹவாய்க்கு ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே வந்தடைந்தார்.
1941 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப் போரில், அமெரிக்க ராணுவ விமான தளத்தின் மீது ஜப்பான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக பேர்ல் துறைமுகத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ திங்கள்கிழமை ஹவாய் தீவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டார் . ஜப்பான் பிரதமர் வருகையைத் தொடர்ந்து பேர்ல் துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வையிட செவ்வாய்க்கிழமை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஷின்சோவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கலந்து கொள்ளவுள்ளார்.
ஹவாய் தீவுக்கு ஜப்பான் பிரதமர் வந்தவுடன், பசுபிக் தேசிய நினைவகத்தில் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினார்.
ஷின்சேவின் இந்த ஹவாய் பயணம் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் உறவின் முன்னேற்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா, இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு சென்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.