உலகம்

இந்திய ஆன்மீக குரு பிறந்தநாள்: 72,585 மெழுகுவர்த்திகளை ஒரே கேக்கில் ஏற்றி சாதனை

பிடிஐ

மறைந்த இந்திய ஆன்மீக குரு சின்மய் குமார் கோஸின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரே கேக்கில் 72,585 மெழுகுவர்த்திகள் ஏற்றி புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த ஆன்மீக குரு சின்மய் குமார் கடந்த 1964-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கு புலம்பெயர்ந்தார். அங்கு மக்களிடையே தியான வகுப்புகள் நடத்தி பெரும் புகழ டைந்தார். இவரது தியான முறை களை இன்றும் பலர் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள  சின்மய் மையத்தில், அவரது 85-வது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாட தியான குழுவைச் சேர்ந்த 100 பேர் முடிவு எடுத்தனர். இதற்காக பிறந்த நாளுக்காக வாங்கப்பட்ட ஒரே கேக்கில் 72,585 மெழுகுவர்த்திகள் ஏற்றி கொண்டாடினர். சுமார் 80.5 அடி நீளத்திலும், 2 அடி அகலத்திலும் செவ்வகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கேக்கில் இவ்வளவு அதிகமாக மெழுகுவர்த்தி ஏற்றப் பட்டதையடுத்து இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன், கலிபோர்னி யாவில் ஒரே கேக்கில் 50,151 மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந் ததே உலக சாதனையாக இருந்தது. இது இப்போது முறி யடிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT