அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் சேன் மாடியோ என்ற மலைப் பகுதியில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நொருங்கிய கார். 
உலகம்

அமெரிக்காவில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது - இந்திய வம்சாவளி குடும்பம் மீட்பு

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் பசடேனா பகுதியில் வசிப்பர் தர்மேஷ் படேல். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், மனைவி, குழந்தைகளுடன் டெஸ்லா காரில், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சேன் மாடியோ என்ற மலைப் பகுதிக்கு சென்றுள்ளார். இவர்கள் சென்ற கார் 300 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் காயங்களுடன் இருந்த 4 வயது சிறுமி மற்றும் 9 வயது சிறுவனை மீட்டனர். தர்மேஷ் படேல் மற்றும் அவரது மனைவி ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து வேண்டுமென்றே நடத்தப்பட்டது போல் தெரிவதால் தர்மேஷ் மீது கொலை முயற்சி, சிறார் கொடுமை ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். விரைவில் தர்மேஷ் படேலை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT