ஐ.நா. சபையின் தடையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில் புதி தாக 5,600 வீடுகளை கட்ட இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றிய பாலஸ்தீன பகுதிகளில் யூத குடியிருப்புகளைக் கட்டக்கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்படும் இதுபோன்ற தீர்மானங் களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்யும். ஆனால் இந்த முறை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்தவில்லை.
எனினும் ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். அதன்படி கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிதாக 5,600 வீடுகளைக் கட்ட அந்த நாட்டு அரசு விரைவில் அனுமதி வழங்க இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.