உள்நாட்டுப் போரினால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா வின் அலெப்போ நகரிலிருந்து பொதுமக்கள் தொடர்ந்து வெளி யேற்றப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சர்வதேச செஞ் சிலுவை சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் (சிரியா) இங்கி செட்கி நேற்று கூறும்போது, “அலெப்போ நகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களை, பஸ்கள் மற்றும் சிறிய வாகனங்கள் மூலம் வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்து இரவு பகலாக நடைபெறுகிறது.
அநேகமாக இன்று இரவுடன் (நேற்று) இந்த நடவடிக்கை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார். கடந்த ஒரு வாரத்தில் 30 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் (ஷியா) சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படை களுக்கும் இடையே 6 ஆண்டு களுக்கும் மேலாக உள் நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.