உலகம்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற 41 பேர் இலங்கையிடம் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

சட்டவிரோதமாக ஆஸ்திரேலி யாவில் குடியேற முயன்ற இலங் கையை சேர்ந்த 41 பேர், மீண்டும் திருப்பி அழைத்துச் செல்லப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப் படைக்கப்பட்டனர்.

திருப்பி அனுப்பப்பட்ட 41 பேரில் நான்கு பேர் தமிழர்கள்.

ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக இலங்கையை சேர்ந்த 41 பேர் கடந்த மாதம் இறுதியில் கப்பலில் சென்றனர். அவர்களை கோகோஸ் தீவு அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், தங்கள் படைக்குச் சொந்தமான கப்பலில் அனைவரையும் ஏற்றிச் சென்று, இலங்கையின் மட்டக் களப்பு மாவட்டத்தில் உள்ள துறைமுகத்தில் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான தகவலை ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்தார்.

“குடியேற முயன்ற அனை வரிடமும் சர்வதேச விதிமுறை களின்படி விசாரணை நடத்திய பிறகே, அவர்களை திருப்பி அனுப்பினோம்.

சர்வதேச அளவில் மேற் கொள்ளப்பட்ட உடன்பாடு களின் அடிப்படையிலும், கடலில் மனித உயிர் இழப்பு களை தவிர்க்கும் நோக்கத் துடனும் நாங்கள் செயலாற்றி வருகிறோம். சர்வதேச விதி முறைக்கு உட்பட்டு உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே, நாட்டுக்குள் நுழைய அனுமதிப்பது குறித்து பரிசீலிப் போம்.

அதே சமயம், ஆஸ்திரேலி யாவின் இந்த நிலைப்பாடு, மக்களை சட்டவிரோதமாக குடி யேற்றும் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக இல்லாத வகையில் பார்த்துக்கொள்வோம்” என்றார் மோரிஸன்.

SCROLL FOR NEXT