உலகம்

போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் ஐ.நா, அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டிப்பு

செய்திப்பிரிவு

21 நாட்களாக நடந்து வரும் போரை நிறுத்துமாறு ஐ.நா.வும் அமெரிக்காவும் தங்களை நிர்பந்தித்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காஸாவில் உடனடியாக போரை நிறுத்த வேண்டுமென்று இஸ்ரேலையும், ஹமாஸ் அமைப்பையும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு: "காஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. பாதுகப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளதால் ஹமாஸ் தீவிரவாதிகள் மேலும் வலுப்பெறுவர். இது இஸ்ரேல் பாதுகாப்பை சற்றும் கருத்தில் கொள்ளாத முடிவு" என தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனை தொடர்பு கொண்டு பேசியபோது, உடனடி, நிபந்தனையற்ற மனிதாபிமான அடிப்படையிலான போர் நிறுத்தத்திற்கு சாத்தியமில்லை என அவர் கூறியதாக, சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை பாலஸ்தீனர்கள் 1030 பேரும், இஸ்ரேலியர்கள் 46 பேரும் பலியாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT