உலகம்

பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்திய மீனவர்கள் 220 பேர் விடுதலை

பிடிஐ

இந்திய மீனவர்கள் 220 பேரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய் துள்ளது.

எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைகளால் இரு தரப்பு உறவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நல்லெண்ண நடவடிக் கைக்கான அறிகுறியாக இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சகம் விடுவித்துள்ளது.

பாகிஸ்தான் கடல் எல்லைக் குள் சட்டவிரோதமாக நுழைந்து, மீன் பிடித்ததாக கைது செய்யப் பட்டு, மாலிர் சிறையில் அடைக்கப் பட்டிருந்த மீனவர்கள் 220 பேரும் கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

அங்கிருந்து லாகூருக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள், வாகா எல்லையில் இந்திய அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறை கண்காணிப்பாளர் ஹசன் சேத்தோ தெரிவித்தார். மேலும், 219 இந்திய மீனவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT