உலகம்

விமானத்தின் கருப்புப் பெட்டியை பிரிட்டனுக்கு அனுப்ப மலேசியா முடிவு: விசாரணைக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வுக்காக பிரிட்டனுக்கு அனுப்ப மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் மலேசிய ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் கடந்த 17-ம் தேதி ஏவுகணை வீச்சில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தில் நெதர்லாந்து தலைமையிலான சர்வதேச வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. விமானம் விழுந்து நொறுங்கு வதற்கு முந்தைய கடைசி நிமிடம் வரை பைலட்களிடையே நடைபெற்ற உரையாடல்களை பதிவு செய்த கருப்புப் பெட்டியை பிரிட்டன் விமான விபத்து புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்து ஆய்வு செய்வது என்று வல்லுநர்கள் குழு முடிவு செய்துள்ளது.

சவப்பெட்டிகளில் அனுப்பிவைப்பு

இதற்கிடையே உயிரிழந்த நெதர்லாந்து பயணிகளின் சடலங் கள், சவப்பெட்டிகளில் வைக்கப் பட்டு விமானத்தில் அந்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. உயிரிழந்த பயணிகளில் 193 பேர் நெதர்லாந்தைச் சேர்ந்த வர்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அவற்றை பெற்று இறுதிச்சடங்குகளை செய்யவுள்ளனர்.

சுட்டு வீழ்த்தியது யார்?

இதற்கிடையே அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர், மலேசிய விமானத்தின் மீது தவறுதலாக ஏவுகணையை ஏவி சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதற் காக நிலப்பரப்பிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் எஸ்.ஏ. 11 ரக ஏவுகணைகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், எதற்காக இந்த தாக்குதலை நடத்தி னர் எனத் தெரியவில்லை. உக்ரைன் விமானம் என தவறுதலாக கருதி தாக்கியிருக்க வாய்ப்புள்ளது.

இந்த தாக்குதலை உக்ரைன் ராணுவம் நிகழ்த்தியிருக்கும் என்ற ரஷ்யாவின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது” என்றனர்.

மலேசிய பிரதமர் உரை

இதற்கிடையே மலேசிய நாடாளு மன்றத்தில் பிரதமர் நஜீப் ரஸாக் பேசும்போது, “விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். அதற்கு விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை துரிதமாக நடைபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண் டும். இது ஒரு மனிதத் தன்மையற்ற, நாகரிமற்ற, பொறுப்பற்ற செயல்.

சர்வதேச நடைமுறைப்படி விமானம் விழந்து நொறுங்கிய இடத்தில் உள்ள தடயங்கள் அழிக் கப்பட்டுள்ளன. ஏவுகணையை ஏவியது யார்? அதை கொடுத்தது யார்? அவர்களின் நோக்கம் என்ன என்கிற கேள்விகளுக்கு எல்லாம் இன்னும் பதில் தெரியவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT