இராக்கில் மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து இராக் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், "இராக்கின் மூத்த பெண் பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலருமான அஃப்ரா அல் குவைசி பாக்தாத்திலுள்ள அவரது இல்லத்திலிருந்து திங்கட்கிழமை இரவு துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட அஃப்ரா, இராக் அரசின் கலாச்சாரத் துறையில் பணியாற்றியவர் என்றும், இராக்கில் நிலவிய தீவிரவாத தாக்குதலையும், ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எனவும் கூறப்படுகிறது.
கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு அஃப்ராவை மீட்க வேண்டும் என பாதுகாப்பு படையினருக்கு இராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி உத்தரவிட்டுள்ளார்.
இராக் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.