நியூயார்க் நகரில் உள்ள முன்னணி அருங்காட்சியகம், ஓம்காரத்தின் மகிமையை வெளிப்படுத்தும் விதமாக பிரத்தியேக கண்காட்சி ஒன்றை நடத்த பிரம்மாண்டமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூபின் கலை அருங்காட்சி யகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் 6-வது தளத்தில், ‘ஓம் லேப்’ என்ற பெயரில் ஓம்கார ஆய்வகம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
இந்த ஆய்வகத்துக்கு வரும் மக்களிடம், ஓம் என்ற புனித மந்திரத் தின் மகத்துவத்தை ஊழியர்கள் விளக்கிக் கூறுகின்றனர். வெறும் சமஸ்கிருத எழுத்தாக அல்லாமல் அதன் பின் உறைந்துள்ள தத்துவார்த்த விவரங்களையும் ஊழியர்கள் எடுத்துரைக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஆய்வகத் தில் உள்ள பிரத்தியேக அறையில், பார்வையாளரின் உச்சரிப்பில் ஓம்கார மந்திர ஒலி பதிவு செய்யப் படுகிறது. இதேபோல கடந்த பல மாதங்களாக பலரிடம் இப்பதிவு களை ஆய்வகம் செய்துவருகிறது. இதுவரை பல லட்சம் பேரின் ஓம்கார மந்திர உச்சரிப்பு சேகரிக் கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், அருங்காட்சியகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் இந்த ஓம்கார மந்திர சேகரிப்பு இடம் பெற உள்ளது. அதுவரை லட்சக்கணக்கான நபர்களிடம் இருந்து பெறப்பட்ட மந்திர உச்சரிப்புகளை ஒற்றை மந்திரமாக மாற்றி கண்காட்சியில் ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளவில் அதிகபட்ச மக்களிடம் இருந்து பெறப்பட்ட மந்திர உச்சரிப்பாக, இந்த ஓம்கார பதிவு திகழும் என, அருங் காட்சியம் தெரிவித்துள்ளது. இது குறித்து அருங்காட்சியகம் வெளி யிட்ட அறிக்கையில், ‘உலகம் முழு வதற்கும் பொதுவான, அனைத்துக் கும் அடிப்படையான ஒலி ஓம் ஆகும். அனைத்து பிரார்த்தனை களுக்கும், மந்திரங்களுக்கும் இதுவே முன்னோடி. மற்ற எல்லா மந்திரங்களின் ஆற்றலையும் ஓம் என்னும் உச்சரிப்பு பெற்றுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.
2004 அக்டோபர் மாதம் நியூயார்க் கின் மான்ஹட்டன் பகுதியில் நிறு வப்பட்ட இந்த அருங்காட்சியகம், சமகால வாழ்வியலையும், இமய மலை மற்றும் அதனையொட்டிய இந்தியா உள்ளிட்ட பகுதிகளின் பாரம்பரிய கலைகளையும், தத்து வங்களையும் இணைக்கும் பணி யில் ஈடுபட்டுள்ளது. இங்கு, 2 முதல் 20-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டங்களைச் சேர்ந்த ஆயிரத் துக்கும் மேற்பட்ட அரிய பொருட் கள் சேகரிக்கப்பட்டுள்ளன.