சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டுப் பகுதிகளில் கடுமையான தாக்குதலை சிரிய அரசுப் படை நடத்தி வருகிறது.
மனிதாபிமான அடிப்படையில் வியாழக்கிழமை மாலை முதல், கிளர்ச்சியாளர்கள் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற சில மணி நேரம் சண்டை நிறுத்தப்படும் என்று சிரிய அரசுப் படைக்கு ஆதர்வாக இருக்கும் ரஷ்யா அறிவித்தது.
ஆனால் ரஷ்யாவின் அறிவிப்பை மீறி சிரிய அரசுப் படைகள் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதில் பொதுமக்கள் 18 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "தொடர்ந்து மூன்றாவது வாரமாக சிரிய அரசுப்படைகள் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. பஸ்தாம் -அல்- குசர் நகரம் மட்டுமே கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த 85% பகுதிகள் அரசுப் படைகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன"என்று கூறப்பட்டுள்ளது.