உலகம்

நியூயார்க் போலீஸில் டர்பன் அணிய சீக்கியருக்கு அனுமதி

பிடிஐ

நியூயார்க் போலீஸ் துறையில் சீக்கியர்கள் டர்பன் அணியவும், தாடி வைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூயார்க் போலீஸ் ஆணையர் ஜேம்ஸ் ஓ நீல் நேற்று கூறியதாவது:

போலீஸ் சீருடை விதிகள் தளர்த் தப்பட்டுள்ளன. அதன்படி நியூயார்க் போலீஸ் துறையில் பணியாற்ற விரும்பும் சீக்கியர்கள் டர்பன் அணியவும், குறிப்பிட்ட அளவு தாடி வைத்துக் கொள்ளவும் அனு மதிக்கப்படுவார்கள். இவ்வாறு ஆணையர் ஜேம்ஸ் கூறினார்.

போலீஸ் துறையின் இந்த அறிவிப்புக்கு நியூயார்க்கில் வசிக்கும் பல்வேறு சீக்கிய அமைப்பினர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT