ஆப்கானிஸ்தானில் அமை தியை நிலைநாட்டுவது தொடர்பாக ‘ஆசியாவின் இதயம்’ என்ற தலைப்பில் மாநாடு வரும் 3-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் தொடங்குகிறது.
இதில் பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தலைமையிலான குழு பங்கேற்கும் என பாகிஸ்தான் முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாநாட்டின் இடையே இந்தியா, பாகிஸ்தான் இடையே இருதரப்பு சந்திப்பு எதுவும் நடைபெறாது என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த முறை இஸ்லாமாபாத்தில் நடந்த ஆசியாவின் இதயம் மாநாட் டின் இடையே, இருதரப்பு பிரதி நிதிகளும் சந்தித்துப் பேசினர். அப் போது, இருதரப்பு அமைதி பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்கு வது என ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால், பதான்கோட் விமானப் படை தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் அமைதிப் பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை.