தென்சீனக் கடலில் அதிநவீன ஏவுகணைகளை சீன ராணுவம் நிறுவியிருப்பது செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தென்சீனக் கடல் பகுதி முழு வதையும் சீனா சொந்தம் கொண் டாடி வருகிறது. இதன்காரண மாக மலேசியா, வியட்நாம், புருனே உள்ளிட்ட நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சீனாவுக்கு எதிராக காய் நகர்த்தும் அமெரிக்கா, தென்சீனக் கடல் பகுதி சர்வதேச எல்லைக்கு உட்பட்டது என்று வாதிட்டு வரு கிறது. இதை நிலைநாட்டும் வகை யில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அந்த கடல் பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா வுக்கு சவால் விடுக்கும் வகையில் தென் சீனக் கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ள சீன ராணுவம் அங்கு விமானப் படைத் தளங்களை ஏற்கெனவே அமைத்துள்ளது.
தற்போது அங்கு ஏவுகணை களை இடைமறித்து அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை யும் சீன ராணுவம் நிறுவியுள்ளது. இவை செயற்கைக்கோள் புகைப் படங்கள் மூலம் உறுதி செய்யப் பட்டிருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎம்டிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு மேலும் கூறியபோது, தென் சீனக் கடல் பிராந்தியத்தில் ராணுவ பலத்தை சீனா படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன்மூலம் சர்வதேச கடல் வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அந்த நாடு முயற்சி செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.