அமெரிக்காவில் புதுமை மற்றும் தொழில் முனைவு திறன் போட்டியில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவருக்கு ரூ.10 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.
டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் நவீன் ஜிண்டால் மேலாண்மை கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் சார்பில் வருடாந்திர வர்த்தக (தொழில்முனைவு) யோசனை போட்டி நடைபெற்றது.
இதில், இந்த பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் படிப்பை முடித்த சமிர் ராஜு, சக மாணவரான பெஞ்சமின் ருபனோவ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட தோல் ஒவ்வாமை சோதனை மருந்து (ஸ்கின் அவேர்) முதல் பரிசைப் பெற்றது. இந்த பரிசின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
இந்த ஸ்கின் அவேரை பயன்படுத்தினால் ஒவ்வாமை எதிர்வினைகளைக் கண்டுபிடித்து விட முடியும். இப்போது சந்தையில் கிடைக்கும் இதர ஒவ்வாமை சோதனை மருந்தோடு ஒப்பிடும்போது, இதை குறைவான அளவில் பயன்படுத்தினாலே போதும்.
ருபனோவின் இளைய சகோதரருக்கு ஒவ்வாமை பரிசோதனை மேற்கொண்டபோது, ஒவ்வாமை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டார். இதனால் மிகவும் பாதுகாப்பான தோல் ஒவ்வாமை சோதனை மருந்தை கண்டுபிடிக்கும் எண்ணம் இவர்களுக்கு தோன்றியது.