பிலிப்பைன்ஸில் இரு வெவ்வேறு இடங்களில் நடத்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 33 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு குறித்து அதிகாரிகள் கூறும்போது, "பிலிப்பைன்ஸின் மத்தியில் உள்ள லெய்டி தீவில் புதன்கிழமை இரவு மக்கள் திரளாகக் கூடி குத்துச் சண்டை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் 27 பேர் காயமடைந்தனர். இரண்டாவது குண்டு வெடிப்பு தலை நகர் மணிலாவிலிருந்து சற்று தொலைவிலுள்ள நகரத்தில் ஏற்பட்டது இதனால் நெடுச்சாலையிலிருந்த தெரு விளக்குகள் சேதமடைந்தன. இதில் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் பிரிவினைவாதிகள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.