இஸ்ரேலிய மாணவர்கள் 3 பேர் கடத்திக் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கு மாறு வலதுசாரி குழுக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், மக்களை அமைதி காக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகை யில், “இஸ்ரேல் குடிமக்கள் அனைவரும், தங்கள் செயல்களிலும் வார்த்தைகளிலும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். நமது இதயம் வலிக்கிறது. ரத்தம் கொதிக்கிறது. ஆனால் நாம் மனிதாபிமானம் கொண்டவர்கள், சட்டத்தை மதித்து நடக்கும் நாட்டின் குடிமக்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்” என்றார்.
பாலஸ்தீன 16 வயது மாணவர் ஒருவர், இஸ்ரேலிய வலதுசாரி தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். 3 இஸ்ரேலிய மாணவர்களின் கொலைக்கு பழிதீர்க்கும் செயலாக இது கருதப்படுகிறது. மேலும் காஸா எல்லையை நோக்கி இஸ்ரேல் தனது படைகளை நகர்த்தியுள்ளது. இந்நிலையில் நெதன்யாகு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜெருசலேத்தில் உள்ள அமெரிக்க தூதர் டான் ஷேப்பி ரோவின் இல்லத்தில், அமெரிக்க சுதந்திர நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பங் கேற்ற நெதன்யாகு மேற்கண்ட வாறு கூறினார். மேலும் பாலஸ் தீன மாணவர் கொலைக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
இம்மாணவரின் உடல் ஜெருசலேம் அருகில் வனப் பகுதியில் கடந்த புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இக் கொலைக்கு காரணமானவர் களை நீதியின் முன் நிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக நெதன்யாகு குறிப்பிட்டார்.
“இக்கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகள் யார், அவர்களின் நோக்கம் என்ன, என்பது இதுவரை தெரிய வில்லை. ஆனால் அவர்களை நிச்சயம் கைது செய்வோம்.” என்றார் நெதன்யாகு.