உலகம்

மனிதவெடிகுண்டு தாக்குதலில் ஆப்கன் அதிபரின் உறவினர் பலி

செய்திப்பிரிவு

ரமலானையொட்டி ஆப்கானிஸ் தான் அதிபரின் உறவினர் ஹஸ்மத்தை சந்திக்க வந்த ஒருவர், தனது தலைப்பாகையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார். இதில் ஹஸ்மத் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ள அஷ்ரப் கனியின் கந்தஹார் பகுதி யின் தேர்தல் பிரச்சார ஒருங் கிணைப்பாளராக இருந்தவர் ஹஸ்மத் கர்ஸாய், இவர், விரை வில் பதவி விலகப் போகும் அதிபர் ஹமீது கர்ஸாயின் உறவினர் ஆவார்.

ஹஸ்மத் கர்ஸாய் கொல்லப் பட்டது குறித்து கந்தஹார் மாகாண ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் தாவா கான் மினாபால் கூறியதாவது: “ரமலானையொட்டி ஹஸ்மத் கர்ஸாயை சந்தித்து வாழ்த்துத் தெரிவிப்பதற்காக விருந்தினரைப் போன்று தற் கொலைப்படையை சேர்ந்த ஒருவர் அவரின் வீட்டிற்கு வந்துள் ளார். ஹஸ்மத்தை கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்தபோது, தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய் துள்ளார். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதிபர் தேர்தலில் போட்டி யிட்டுள்ள அஷ்ரப் கனிக்கு, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அதிக வாக்குகள் கிடைத்ததாக தகவல் வெளியானது. ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அப்துல்லா, தேர்தலில் தோல்வி யடைந்ததை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். அதிகளவில் தேர் தல் முறைகேடு நடைபெற்றிருக்க லாம் என்று புகார் கூறினார். இதை யடுத்து தற்போது வாக்குகளை தணிக்கை செய்யும் பணி நடை பெற்று வருகிறது. இனிமேல்தான் இறுதி அறிவிப்பு வெளியாகவுள்ளது.

வாக்குப்பதிவு விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே மோத லான போக்கு இருந்து வரும் சூழ்நிலையில், அஷ்ரப் கனியின் முக்கிய ஆதரவாளரும், தற் போதைய அதிபரின் உறவினரு மான ஹஸ்மத் கர்சாய் கொல்லப் பட்டது ஆப்கானிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT