ஃப்ளோஸி பூனை 
உலகம்

ஃப்ளோஸிக்கு வயது 26... - இதுதான் இப்போது உலகின் வயதான பூனை!

செய்திப்பிரிவு

லண்டன்: உலகின் வயதான பூனையாக லண்டனை சேர்ந்த பெண் பூனை ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

லண்டனின் ஆர்பிங்டனைச் சேர்ந்த 26 வயதான ஃப்ளோஸி என்ற பூனைதான் உலகிலேயே வயதான பூனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்து கின்னஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ஃப்ளோஸிதான் உலகின் வயதான பூனை. ஃப்ளோஸியின் 26 வயது என்பது மனிதர்களின் 120 வயதுக்கு ஒப்பாகும்” என்று தெரிவித்துள்ளது.

ஃப்ளோஸியின் உரிமையாளர் விக்கி க்ரீன் கூறும்போது, “ஃப்ளோஸி ஒரு மாற்றுத்திறன் பூனை. ஃப்ளோஸிக்கு காது கேட்காது. கண்பார்வை குறைபாடு உள்ளது. ஆனால், மிகவும் அன்பான பூனை. விளையாட்டுத்தனமான பூனை.

தற்போது கின்னஸ் உலக சாதனை புரிந்த ஒருவருடன் நான் இப்போது என் இல்லத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் நம்மால் முடியவில்லை” என்று தெரிவித்தார்.

கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ள ஃப்ளோஸி பூனையைக் காண பார்வையாளர்கள் குவிந்து வருகின்றன.

SCROLL FOR NEXT