உலகம்

வடமேற்கு பாகிஸ்தானில் மோதல்: 9 போலீஸார், 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பெஷாவர்: பாகிஸ்தானில் பதற்​றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்​தின் ஹங்கு மாவட்​டத்​தில் உள்ள ஒருகாவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்​குதல் நடத்​தினர்.

இதையடுத்து அங்கு கூடு​தல் போலீ​ஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். கூடு​தல் போலீ​ஸார் சென்ற வாக​னம் மீதும் தீவிரவாதிகள் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர். இதற்கு பதிலடி கொடுக்​கும் நடவடிக்​கை​யில் போலீ​ஸார் நேற்று ஈடு​பட்​டனர். அப்போது தீவிர​வா​தி​களும் எதிர் தாக்​குதல் நடத்​தினர்.

இதுகுறித்து போலீஸ் செய்​தித் தொடர்​பாளர் நேற்று கூறுகை​யில், “ஹங்கு மாவட்​டத்​தில் தீவிர​வா​தி​களுக்கு எதி​ரான காவல்​துறை நடவடிக்​கை​யில் 9 போலீ​ஸார் உயி​ரிழந்​தனர். மேலும் 28 பேர் காயம் அடைந்​தனர். தீவிரவாதிகள் தரப்​பில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்​தனர்” என்​றார்.

தீவிர​வா​தி​களின் தாக்​குதலுக்கு கைபர் பக்​துன்​கவா முதல்​வர் சுகைல் அப்​ரிதி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்க அதி​காரி​களுக்கு அவர் உத்தரவிட்டுள்​ளார். தீவிர​வா​தி​களின் வன்​முறை, ஆப்கானிஸ்தான் போராளி​களின் ஊடுரு​வல் மற்​றும் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கை காரண​மாக கைபர் பக்துன்கவா மாகாணம் பல ஆண்​டு​களாக அமை​தியை இழந்துள்ளது.

ஆப்​கானிஸ்​தானை ஒட்​டி​யுள்ள இம்​மா​காணத்​தில் தீவிர​வாத தாக்குதல்​களை நடத்​து​வ​தாக தடை செய்​யப்​பட்ட ‘தெஹ்ரீக்​-இ-தலி​பான் பாகிஸ்​தான்’ அமைப்​பு மீது பாகிஸ்​தான்​ அரசு குற்​றம்​ சாட்​டுகிறது.

சிறுமி சுட்​டுக் கொலை

இந்​நிலை​யில் பலுசிஸ்​தான் மாகாணத்தில் ஒரு சிறுமியை பாகிஸ்​தான் ராணுவத்​தினர் சுட்​டுக் கொன்​றுள்​ளனர். பிறகு அந்த சிறுமி​யின் உடலை ஒரு ராணுவ வாக​னத்​தில் முன்​புறம் வைத்​த​படி சாலைகளில் ஊர்​வல​மாக சென்​றனர்.

இந்த வீடியோ இணையத்​தில் பரவி வரு​கிறது. போ​ராட்​டம்​ நடத்​தும்​ மக்​களை அச்​சுறுத்​தும்​ வித​மாக இந்​த அட்​டூழியத்​தை ​பாகிஸ்​தான்​ ​ராணுவம்​ நடத்திய​தாக கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT