உலகம்

அமெரிக்க கோடீஸ்வரர் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம்: தனியார் ஜெட் விமான விபத்து பற்றி தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலராடோ மாகாணம், ஆஸ்பென் நகரைச் சேர்ந்​தவர் ஆடம் ராபின்சன் (45). இவர் இரு சாப்ட்வேர் நிறு​வனங்​களை நடத்தி வந்​தார். இந்த நிறுவனங்களின் சராசரி ஆண்டு வரு​வாய் 331 கோடியே 30 லட்சம் ரூபாயாக உள்ளது.

இளம் தொழிலதிபரான ராபின்​சன் கடந்த 1-ம் தேதி மனைவி ஹெலன்(40), மகள் எம்மா(4), மகன் சார்லி(2) ஆகியோ​ருடன் டெக்​சாஸ் மாகாணம் ஆஸ்​டின் நகரில் இருந்து பஹாமாஸ் தீவுக்கு தனியார் ஜெட் விமானத்​தில் சென்​றார். அவரது வீட்டு பணிப்​பெண் அனிதா மரியா செடினா, குடும்ப நண்​பர் ராச்​சல் ரீட், சார்மி ஆகியோ​ரும் விமானத்​தில் பயணம் செய்​தனர். விமானி ஜெப் கிரி​கோரி (55), துணை பெண் விமானி நதாலியா (20) ஆகியோர் விமானத்தை இயக்​கினர்.

புளோரிடா மாகாணம், பாம் பீச் பகுதி​யில் விமானம் பறந்​த​போது குடி​யிருப்பு பகுதி​யில் விழுந்து வெடித்​துச் சிதறியது. இதில் விமானத்​தில் பயணம் செய்த 9 பேரும் உயி​ரிழந்​தனர். கடைசி நிமிடங்​களில் துணை விமானி நதாலியா கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்டு, “விமானம் கட்​டுப்​பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்​கிறது” என்று தெரி​வித்​துள்​ளார்.

சுமார் 9,000 அடி உயரத்​தில் விமானம் பறந்​த​போது ரேடார் கண்​காணிப்​பில் இருந்து மறைந்​தது. அமெரிக்​கா​வின் மோச​மான விபத்​துகளில் இது​வும் ஒன்​றாகக் கருதப்​படு​கிறது. விபத்துக்குள்ளான ஜெட் விமானம் 22 ஆண்​டுகள் பழமையானது ஆகும். விபத்து குறித்து் அமெரிக்​கா​வின் தேசிய போக்​கு​வரத்து பாதுகாப்பு ஆணைய அதி​காரி​கள் தீவிர விசா​ரணை நடத்தி வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT