உலகம்

யுஎஸ் அதிபராக கடைசி சுற்றுப்பயணம்: பெரு சென்றார் ஒபாமா

ஏபி

அமெரிக்க அதிபராக தனது கடைசி சுற்றுப்பயணமாக ஆசிய - பசுபிக் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள பெரு நாட்டுக்குச் சென்றார் பாரக் ஒபாமா.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஆசிய - பசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையேயான இரண்டு நாள் மாநாடு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இதன் முதல் கட்டமாக பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கியை ஒபாமா இன்று காலை சந்தித்தார். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆசிய - பசிபிக் மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார் ஒபாமா.

மாநாட்டின் இறுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்க உள்ளார்.

SCROLL FOR NEXT