துருக்கியில் கவர்னர் அலுவலகத்தின் வெளியே இன்று (வியாழக்கிழமை) காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு குறித்து அடனா பகுதி கவர்னர் கூறும்போது, "கவர்னர் அலுவக கட்டிடத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்த குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
குண்டுவெடிப்பினால் கவர்னர் அலுவலகக் கட்டிடங்கள் சிறிய அளவில் சேதமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் குண்டுவெடிப்பை பெண் ஒருவர் நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.