உலகம்

பேசும் படம்: கண்டுகொள்ளப்படாத கண்ணீர்

செய்திப்பிரிவு

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது ராணுவத்தினர் நடத்திவரும் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

படுகொலை, சித்ரவதை, பாலியல் பலாத்காரம் என்று கடுமையான தாக்குதல்கள் மூலம் ரோஹிங்யா முஸ்லிம்களை அச்சுறுத்தி, அவர்களது வாழ்விடத்திலிருந்து விரட்டும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கானோர் வங்கதேசத்துக்குத் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆங் சான் சூச்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் போராட்டம் நடத்துகிறார்கள் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள்.

SCROLL FOR NEXT