உலகம்

3-ம் உலகப் போர் தடுக்கப்பட்டுள்ளது: ரஷ்ய அரசு கருத்து

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபராக ஹிலாரி கிளின்டன் தேர்ந்தெடுக்கப்பட் டிருந்தால் 3-ம் உலகப் போர் ஏற் பட்டிருக்கக்கூடும். ட்ரம்ப் அதிப ராகி இருப்பதால் உலகப்போர் தடுக்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய அரசு கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆலோசகர் செர்ஜி கிலாயேவ் கூறியிருப்ப தாவது:

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற் றிருப்பதை வரவேற்கிறோம். அமெரிக்காவின் முன்பு 2 வாய்ப்பு கள் உள்ளன. இதில் முதல் வாய்ப்பு 3-ம் உலகப் போர். இரண்டாவது வாய்ப்பு உலக அமைதி.

ஆனால் ஹிலாரி கிளின்டனை பொறுத்தவரை அவர் போரையே விரும்பினார். அவர் அதிபராகி இருந்தால் நிச்சயம் 3-ம் உலகப் போர் ஏற்பட்டிருக்கும். ட்ரம்ப் அதிபராகி இருப்பதால் உலகப் போர் தடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த விவகாரத்தால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக் கும் இடையே மீண்டும் பனிப் போர் உருவாகி உள்ளது.

          
SCROLL FOR NEXT