புதிய இந்திய ரூபாய் நோட்டுகளான ரூ.500, ரூ.2000 ஆகியவை செல்லாது என்று கூறி, நேபாள ராஷ்ட்ரிய வங்கி (NRB) இந்த புதிய இந்திய நோட்டுகளுக்குத் தடை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இந்தியா அதிகாரபூர்வ அறிவிக்கை அளித்தால் மட்டுமே நேபாளத்தில் புதிய ரூ.500, ரூ.2000 செல்லும் என்று நேபாள் ராஷ்ட்ரிய வங்கி கூறியுள்ளது.
இந்தியாவும் அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்ட (FEMA) அறிவிக்கையையும் இந்தியா அளிக்கவுள்ளது.
முன்னதாக, 2015 வரை இந்திய ரூ.500 மற்றும் ரூ.1000 பயன்படுத்த நேபாள் தடை விதித்திருந்தது. ஆனால் நேபாளத்திற்கு பிரதமர் மோடி சென்றதையடுத்து தடை நீக்கப்பட்டது. அதாவது பிரதமர் மோடி சென்று வந்த பிறகு ரூ.25,000 வரையிலும் நேபாள் மக்கள் இந்திய ரூ.500, 1000 நோட்டுகளை வைத்துக் கொள்ள அனுமதி அளித்தது.
தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ரூ.500, 1000 நோட்டுகளை நேபாளத்தில் உள்ள இந்தியரல்லாதோர் கைவசம் வைத்துள்ளனர், இவர்கள் இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள ஆர்பிஐ பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.