இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சதிஷ் கர்தான் (43) மற்றும் அவரின் மனைவி ஷர்மிஸ்தா பராய் (38) ஆகிய இருவரும், கடந்த 2014 முதல் அக்டோபர் 2016 வரையிலான காலகட்டத்தில் நியூமெக்சிகோ, ஸ்டாக்டன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசித்து வந்தனர்.
இவர்கள் வீட்டுவேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக இணைய தளம் மற்றும் இந்திய செய்திப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளனர். இதன் மூலம் வேலையில் சேர்ந்தவர்களுக்கு, சொன்னபடி சம்பளமும், சலுகைகளும் தர மறுத்துள்ளனர்.
குறைந்த சம்பளத்தில் அதிக நேரம் வேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதோடு, வீட்டு வேலைக்கு அமர்த்திய பணியாளர்களை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் இருவர் மீதும், புகார்கள் கூறப்பட்டன.
இதையடுத்து, கர்தான் மற்றும் பராய் ஆகிய இருவரும், கடந்த அக்.21-ம் தேதி கைது செய் யப்பட்டனர். வீட்டு வேலைக்கோ, குழந்தை பராமரிப்புக்கோ உற வினர் தவிர வேறு யாரையும் பணி யில் அமர்த்தக் கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் இருவரும் பிணையில் விடுவிக் கப்பட்டனர்.
இந்நிலையில், கர்தான், பராய் ஆகிய இருவருக்கும் எதிராக முறைப்படி நீதிமன்றத்தில் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினரைக் கட்டாயப்படுத்தி வீட்டு வேலைக்கு அமர்த்தியதால், ஆள் கடத்தல் குற்றப்பிரிவின் கீழ் இருவருக்கு எதிராகவும் குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டதாக, நீதித்துறை வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை முடிந்து, குற்றச்சாட்டு உறுதியானால், கணவன், மனைவி இருவருக்கும் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 2.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.