உலகம்

படகு கவிழ்ந்ததில் அகதிகள் 100 பேர் கடலில் மூழ்கினர்

பிடிஐ

மத்திய தரைக்கடல் பகுதியில் படகு திடீரென கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த சுமார் 100 அகதிகள் நீரில் மூழ்கினர். இவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.

இந்தப் படகை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஜெர்மனி தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஜுகென்ட் ரெட்டெட் ட்விட்டரி, “23 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். மேலும் காணாமல் போன சுமார் 100 பேரை தேடி வருகிறோம். இதில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்” என கூறியுள்ளது.

இந்த விபத்தில் உயிர் தப்பிய ஒருவர் கூறும்போது, “122 பேர் படகில் பயணம் செய்தோம். இதில் 15 பேர் பெண்கள். 15 வயதுக்குக் குறைவான குழந்தைகள் யாரும் இல்லை” என்றார்.

சிரியா, லிபியா உள்ளிட்ட நாடு களில் சண்டை நடைபெற்று வருவ தால் லட்சக்கணக்கானோர் அங் கிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடை கின்றனர். இதற்காக இவர்கள் படகு களில் செல்லும்போது அடிக்கடி விபத்தில் சிக்கி நூற்றுக்கணக்கா னோர் பலியாகின்றனர்.

SCROLL FOR NEXT