உலகம்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது போர்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தளபதி பேச்சு

பிரவீன் சுவாமி

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுப்போம் என செவ்வாய்க்கிழமை தான் ஆற்றிய ரம்ஜான் தின உரையில் குறிப்பிட்டுள்ளார் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தளபதி இப்ராஹிம் அவாத் அல் பாத்ரி.

இந்த அமைப்புதான் சிரியாவிலும் இராக்கிலும் அரசுப் படைகளை எதிர்த்து தற்போது போர் தொடுத்து வருகிறது. பல நகரங்களை கைப்பற்றி அந்த பகுதிகளை உள்ளடக்கி புதிய அரசையும் அமைத்துள்ளது.

பாத்ரியின் 20 நிமிட ரம்ஜான் தின உரை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியானது.உரை விவரம் வருமாறு:

சீனா, இந்தியா, பாலஸ்தீனம், சோமாலியா, அரேபிய தீபகற்பம், ஷாம் (தி லெவான்ட்), எகிப்து, இராக், இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பின்ஸ் ஆவாஸ், ஈரான், பாகிஸ்தான், துனிசியா, லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

சிறையில் உள்ள கைதிகள் துயரத்தில் உருகுகிறார்கள். உதவி கேட்டு அழுகிறார்கள். அநாதை களாக நிற்போரும் விதவைகளும் தமது வேதனைகளை வெளியில் கொட்டி புலம்புகிறார்கள். குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கண்ணீர் விட்டு அழுகின்றனர். எனவே, உங்கள் தரப்பிலிருந்து மேற்கொள்ளப் படும் புனிதப்போரை இஸ்லாமிய தேசம் நம்பிக்கையுடன் கவனிக் கிறது.

உலகின் பல பகுதிகளில் உங்களின் சகோதரர்கள் பல்வகை கொடூரத்துக்கும் உள்ளாக்கப் படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வார ஆரம்பத்தில் பாத்ரியை விசுவாசிகளின் தளபதி யாக ஐஎஸ்ஐஎஸ் அறிவித்தது, தாம் உருவாக்க விரும்பும் காலிபட்டின் (இஸ்லாமிய அரசு) தலைவராக பிரகடனப் படுத்தியது.

இராக், சிரியா நாடுகளில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தனி நாடாக அறிவித்துள்ளது.

இரு நாடுகளிலும் பெரும் பான்மை பகுதிகள் அந்தப் படையின் வசம் உள்ளன. இந்நிலை யில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைத்து இஸ்லாமிய அரசு (காலிபட்) உருவாக்கப்பட்டுள்ளதாக ஐஎஸ்ஐஎஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT