உலகம்

வெளிச்சத்துக்கு வராத காஸ்ட்ரோவின் வாழ்க்கை

செய்திப்பிரிவு

ஃபிடல் காஸ்ட்ரோவின் சொந்த வாழ்க்கை திரைமறைவாகவே இருந்தது. கியூபாவின் மக்களுக்கேகூட அவரின் மனைவி, பிள்ளைகள் குறித்து தெரியாது.

காஸ்ட்ரோவின் வாழ்வில் பல பெண்கள் கடந்து சென்றுள்ளனர். அவர் 2 முறை திருமணம் செய்து கொண்டதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. முதல் மனைவியின் பெயர் டயஸ் பலார்ட். அவர்களுக்கு ஃபிடல்லிட்டோ என்ற மகன் உள்ளார். வசதி யான குடும்பத்தைச் சேர்ந்த டயஸ் மூலம் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் காஸ்ட்ரோவுக்கு தொடர்பு கிடைத்தது. சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இரண்டாவதாக டாலியா சோட்டோ டெல் வாலே என்ற ஆசிரியையை காஸ்ட்ரோ திருமணம் செய்து கொண்டார். இதன்மூலம் காஸ்ட்ரோவுக்கு 5 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் தவிர மேலும் சில பெண்களும் காஸ்ட்ரோ வாழ்க்கையில் அங்கமாக இருந்தனர். ஒட்டுமொத்தமாக அவருக்கு 11 பிள்ளைகள் இருப்ப தாகக் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் யாரும் அரசியலில் இல்லை.

பன்டோ சிரோ பகுதியில் உள்ள வீட்டில் காஸ்ட்ரோ தனது இறுதி காலத்தை கழித்தார்.

SCROLL FOR NEXT