உலகம்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அலட்சியப் போக்கு: ஹபீஸ் சயீத் சாடல்

பிடிஐ

மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதல் ‘மாஸ்டர் மைன்ட்’ என்று கருதப்படும் ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அலட்சியப் போக்கைக் கடைபிடிப்பதாக நவாஸ் ஷெரிப் அரசு மீது சாடியுள்ளார்.

வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து அவர் கூறிய போது, “காஷ்மீரில் இந்தியா செய்யும் அராஜகங்களுக்கு பாகிஸ்தானின் எதிர்வினை அலட்சியமாக உள்ளது, அடக்குமுறைக்குள்ளாகும் காஷ்மீரிகளின் சார்பாக நவாஸ் ஷெரீப் அரசு வினையாற்றவில்லை.

இது குறித்து ஓரிரு அறிக்கைகளை வெளியிடுவது போதாது, செயல் அளவில் காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தான் முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார் ஹபீஸ் சயீத்.

SCROLL FOR NEXT