இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் 57-வது பிரதமராக பதவியேற்றுள்ளார். இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமர், வெள்ளையினத்தை சாராத முதல் பிரதமர், முதல் இந்திய வம்சாவளி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை ரிஷி சுனக் பெற்றுள்ளார். இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனான ரிஷி, இளம் வயதில் (42) பிரதமராகி, கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைத்துள்ளார்.
இதனிடையே, ரிஷி சுனக்கின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. செஃப் சஞ்சய் ரெய்னா என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் அவருடன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் இணைந்து வீடியோ கால் பேசுகிறார். வீடியோவில் செஃப் சஞ்சய் ரெய்னா, "மாமா, நான் உங்களுக்கு ஒருவரை அறிமுகம் செய்யப்போகிறேன்" என்று சொல்லி கேமராவை திருப்பி பிரதமர் ரிஷி சுனக்கை அறிமுகம் செய்துவைக்கிறார்.
உடனே, பிரிட்டன் பிரதமர் ரிஷி, ``விஜய் மாமா, ஹாய் நான் ரிஷி. எப்படி இருக்கிறீர்கள். 10 டவுனிங் தெருவிற்கு வந்து என்னை சந்திப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே நீங்கள் இங்கு வந்ததும், உங்கள் மருமகன் சஞ்சய் உங்களை டவுனிங் தெருவுக்கு அழைத்து வரச் சொல்லுங்கள்" என்று சிரித்த முகத்துடன் பேசுகிறார். இதுதற்போது வைரலாகிவருகிறது.