வங்கதேசத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியாவுக்கு (71) எதிராக நேற்று கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
ஆளும் அவாமி லீக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அதிபருமான ஷேக் முஜிபூர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத் தினர் கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி தேசிய துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், வங்கதேச தேசியவாத கட்சித் (பிஎன்பி) தலைவரான ஜியா ஆகஸ்ட் 15-ம் தேதி தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி வரு கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆளும் கட்சி இவர் மீது மெட்ரோபாலிடன் மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த நீதிமன்றம், நேரில் ஆஜராகுமாறு ஜியாவுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஜியாவுக்கு நீதிமன்றம் நேற்று கைது வாரன்ட் பிறப்பித்தது.
எனினும், கைது செய்தது தொடர்பான அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக் குள் சமர்ப்பிக்குமாறு போலீஸா ருக்கு நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. எனவே, ஜியா உடனடி யாக கைது செய்யப்பட மாட்டார் என சட்ட நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். இதனிடையே, ஜியா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெறுவார் என எதிர்பார்க் கப்படுகிறது.