உலகம்

சூடான் நாட்டில் இரு பிரிவு மோதல்: 200 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ப்ளூ நைல்: சூடானில் கடந்தாண்டு ராணுவ தளபதி அப்தெல் பதா அல்-புர்ஹான் ஆட்சியை கைப்பற்றினார். அதன்பின் புதிய பழங்குடியினர் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஹவுசா என்ற பிரிவினருக்கு நில உரிமை மறுக்கப்படுகிறது.

இதனால், எத்தியோபியா எல்லையில் உள்ள புளூ நைல் பகுதியில் ஹவுசா இனத்தினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே கடந்த வாரம் மோதல் வெடித்தது. துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு சம்பவங்கள் ஆங்காங்கே நடந்ததால், 2 நாட்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஆக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT