உலகம்

அமெரிக்காவில் நிலநடுக்கம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பெரும் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒக்லஹோமா மாகாணத்தின் தலைநகர் ஒக்லஹோமா சிட்டி. அங்கிருந்து 50 மைல் தொலைவில் உள்ள குஷங் நகரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.3 ஆகப் பதிவானது. இதனால் உயிரிழப்பு கள் நேரிடவில்லை. எனினும் குஷங் டேங்க் பார்ம் எண்ணெய் நிறுவன எரிவாயு குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு விஷவாயு கசிந்தது. உடனடியாக சுற்றுவட்டார மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஏராளமான கட்டிடங்கள் சேத மடைந்துள்ளன. இதில் பலர் காயமடைந்தனர். அவர்கள் மருத் துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒக்லஹோமா மாகாணத்தில் 19 நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து நிலஅதிர்வுகள் ஏற்படும் என்று அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT