உலகம்

இலங்கையுடன் எந்த மறைமுக திட்டமும் இல்லை: சீன தூதர்

பிடிஐ

'இலங்கையுடனான சீனாவின் உறவு வெளிப்படையானது. இதில் மறைமுகத் திட்டம் ஏதும் இல்லை' என சீன தூதர் யீ ஸியானிலாங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "இலங்கையுடன் சீனா கொண்டுள்ள உறவைப் பற்றி இலங்கை ஊடகங்கள் தவறான புரிதலை கொண்டுள்ளன.

இலங்கையின் அரசியல் உள் விவகாரங்களில் சீனா தலையிடாது. இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, இலங்கையை முன்னேற்றமடையவே சீனா உதவுகிறது" என்றார்.

மேலும் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் சீனா அதிக வட்டிக்கு கடன்கள் வழங்கியது என்ற குற்றச்சாட்டையும் யீ திட்டவட்டமாக மறுத்தார்.

சீன தூதர் யீ ஸியானிலாங் இலங்கைப் பயணம் இரு நாட்டு உறவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT