இஸ்ரேல் காஸா போர் நடை பெற்றுவருவதால் இஸ்ரேலுக்கான விமான சேவையை பெரும்பாலான விமான நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
இஸ்ரேல்-காஸா போர் 16- நாட்களாக நடைபெற்றுவருகிறது. இதில், 640 பாலஸ்தீனர்களும், 31 இஸ்ரேலியர்களும் கொல்லப் பட்டுள்ளனர். இஸ்ரேல் மீது காஸா பகுதி யிலிருந்து ஹமாஸ் இயக்கத் தினர் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த ராக் கெட்டுகளில் சில, இஸ்ரேலின் பென் குரியான் விமான நிலையத் துக்கு அருகில் விழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க விமான நிறுவனமான டெல்டா, இஸ்ரேல் செல்லவிருந்த தனது விமானத்தை, பாரிஸுக்கு திருப்பி விட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு இஸ்ரேலுக்கு புறப் படவிருந்த மற்றும் இஸ்ரேலி லிருந்து அமெரிக்கா வரவிருந்த அனைத்து விமானங்களையும் இயக்காமல் நிறுத்திவைத்துள் ளது.
ஏர்பிரான்ஸ் மற்றும் நெதர் லாந்து நாட்டின் கேஎல்எம் விமான நிறுவனம் ஆகியவையும் இஸ்ரேலுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளன. காஸாவின் ஷாஜா-இயா பகுதி மீது ஒரே இரவில் 187 இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி யதாக இஸ்ரேல் ராணுவம் தெரி வித்துள்ளது. ஹமாஸ் இயக்கத் தினர், குடியிருப்புப் பகுதியை ஆயுதங்களைப் பதுக்கி வைக்க வும், ராணுவத் தளமாகவும் பயன் படுத்தி வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
640 பேர் பலி
‘இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 640 பாலஸ் தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4040-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 70 சதவீதத்தினர் பொதுமக்கள்’ என பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. நிவாரணப் பணிகள் முகமை, 1,18,300-க்கும் அதிக மானவர்கள் அகதிகளாக முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஸாவின் 43 சதவீத பகுதியி லுள்ள மக்கள் வெளியேறும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். அப் பகுதிகளுக்குள் யாரும் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள் ளனர் என்று கூறியுள்ளது.
29 இஸ்ரேல் ராணுவ வீரர்களும், 2 குடிமக்களும் இப்போரில் கொல்லப்பட்டுள்ளனர். ஜெருசலேம் சென்ற ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நெதான்யாஹு சந்தித்தார். அப்போது, இஸ்ரேல் மீது வீசப் பட்ட ராக்கெட்டுகளை பான் கீ மூனிடம் காட்டினார்.