அமெரிக்க நாடாளுமன்ற தேர்த லில் 3 தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் 5 பேர் வெற்றிப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்த லோடு நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் சபையில் 435 இடங் களுக்கும் (2 ஆண்டு பதவிக் காலம்) 34 செனட்டர் பதவிகளுக்கும் (6 ஆண்டு பதவிக் காலம்), 12 மாகாண ஆளுநர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது.
இதில் ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் போட்டியிட்டனர். இதில் செனட்டர் பதவிக்காக கலிபோர்னியா மாகா ணத்தில் இருந்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் (51), வெற்றிப் பெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.
வாஷிங்டனின் சியாட்டில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வம்சாவளி பெண்ணான பிரமிளா ஜெயபால் (51) கணிசமான வாக்கு களைப் பெற்று, மக்கள் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். இதன் மூலம் அந்த சபைக்கு செல்லும் முதல் இந்திய அமெரிக்க வம்சாவளி பெண் என்ற பெரு மையைப் பெறுகிறார். இவரும் ஜனநாயக கட்சி வேட்பாளர்.
கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்டுள்ள ரோ கண்ணா மற்றும் அமி பேரா இருவரும் முன்னிலை வகித்து வருகின்றனர். கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலியில் இருந்து போட்டியிட்டுள்ள குடியரசு வேட் பாளரான பெராவுக்கு மொத்தம் எண்ணப்பட்ட 56 சதவீத வாக்கு களில், 54 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த முறையும் பெரா வெற்றிப் பெற்றால் 3-வது முறையாக அவர் மக்கள் பிரதிநிதித் துவ சபைக்குத் தேர்ந்தெடுக்கப் படுவார். இதன்மூலம் இந்திய அமெரிக்க வம்சாவளியினர் வர லாற்றில் நீண்டகாலம் எம்பியாக பதவி வகித்த பெருமை பெரா வுக்கு கிடைக்கும்.
கலிபோர்னியாவின் 17-வது மாவட்டத்தில் இருந்து போட்டி யிட்ட மற்றொரு குடியரசு கட்சி வேட்பாளர் ரோ கண்ணாவுக்கு 58 சதவீத வாக்குகள் பதிவாகி யுள்ளன. இவரை எதிர்த்து போட்டி யிட்ட அதே கட்சியைச் சேர்ந்த மைக் ஹோண்டாவுக்கு 42 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.
இல்லினாய்ஸ் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தியும் (42) மக்கள் பிரதிநிதித்துவ சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஒபாமா நிர்வாகத்தில் கொள்கை ஆலோசகராக பதவி வகித்தவர். இவரும் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.