உலகம்

தோல்விக்கு எஃப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமிதான் காரணம்: ஹிலாரி குற்றச்சாட்டு

ஏஎஃப்பி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், தன் தோல்விக்கு எஃப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமிதான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தலுக்கு 2 வாரங்களுக்குக் குறைவான காலக்கட்டம் இருந்த போது ஹிலாரியின் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல் போக்குவரத்துகளை மீண்டும் கவனிக்கவுள்ளதாக ஜேம்ஸ் கோமி அறிவித்தது எதிர்மறை விளைவுக்குக் காரணமாகியுள்ளது என்றார் ஹிலாரி.

ஹிலாரி தனது நேஷனல் நிதிக் கமிட்டியிடம் கூறும்போது, “இத்தகைய தேர்தல்கள் தோல்வியடைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஆனால் நம் ஆய்வுப்படி எஃப்.பி.ஐ. இயக்குநர் ஜின் கோமியின் கடிதம் அடிப்படை ஆதாரமற்ற சந்தேகங்களை கிளப்பிவிட்டது. இதனால் நமது உத்வேகம் நின்றது” என்றார்.

அதிபர் தேர்தல் விவாதங்களில் ஹிலாரி மூன்றில் முன்னிலை வகித்தார். “3-வது விவாதம் முடிந்தவுடன் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் எப்.பி.ஐ-யின் கடைசி நேர புகார்களை எங்களால் மீண்டு வர முடியவில்லை” என்றார் ஹிலாரி.

SCROLL FOR NEXT