இத்தாலியில் கடந்த ஓராண்டில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் பெற்றோராலும், முன்னாள் வாழ்க்கைத் துணையாலும் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டில் அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைகளைக் காட்டுகிறது.
பெண்கள் தாக்கப்படுதல், அச்சுறுத்தப்படுவது, பெண்களைப் பின்தொடர்ந்து தொல்லை தருதல் என்று பல்வேறு குற்றங்களும் அதிகரித்திருக்கின்றன.
இதைக் கண்டித்து தலைநகர் ரோமில் சமீபத்தில் நடந்த போராட்டத்தின்போது, பெண்களுக்கு நிகழ்த்தப்படும் குற்றங்களைக் கண்டித்து எழுதப்பட்ட பதாகையுடன் நிற்கிறார் இந்தப் பெண்!
- படம்: ஏ.எஃப்.பி.