இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளுக் கும், அரசு படைகளுக்கும் இடையே கடும் மோதல் முற்றி வருகிறது. ஐஎஸ் வசம் இருக்கும் மோசூல் நகரில் அரசு படைகள் முன்னேறி வருகின்றன. இதனால் அப்பாவி பொதுமக்களை மனிதகேடயமாக பயன்படுத்தி ஐஎஸ் தீவிரவாதிகள் அரசு படைகளின் தாக்குதலில் இருந்து தப்பி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்களது கட்டளைக்கு கீழ்படியாத 10 முதல் 14 வயதுள்ள நான்கு குழந்தை களையும், நான்கு பெரியவர்களை யும் ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக் கியால் சுட்டுக் கொலை செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி யுள்ளன. இதற்கு ஜெனீவா வில் உள்ள ஐ.நா மனித உரிமை அலுவலக செய்தி தொடர்பாளர் ரவீனா ஷம்தாசனி வேதனை தெரிவித்துள்ளார். ஐஎஸ் தீவிர வாதிகளுக்கு எதிரான போரை அரசு படைகள் தீவிரமாக நடத்தி வருகின்றன.