உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே 4.62 கோடி வாக்கு

பிடிஐ

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அதிகாரபூர்வமாக நடைபெறும் நாளுக்கு முன்னதாகவே வாக் களிக்கும் நடைமுறை உள்ளது. எனினும், இது மாகாணத்துக்கு மாகாணம் (4 நாள் முதல் 50 நாட்கள் வரை) வேறுபடும்.

இந்நிலையில், மொத்தம் உள்ள 20 கோடி வாக்காளர்களில் 4.62 கோடி பேர் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே வாக்களித்துள்ள தாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 2012-ல் நடந்த அதிபர் தேர்தலின் போது பதிவான 3.23 கோடி வாக்குகளைவிட அதிகம் ஆகும்.

இந்த முறை தேர்தல் நாளுக்கு முன்னதாகவே அதிக அளவில் வாக்குகள் பதிவாகி இருப்பது, அமெரிக்கர்களின் வாக்களிக்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை பிரதிபலிப்பதாக இத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரியான மைக்கேல் மெக்டொனால்டு இது குறித்து கூறும்போது, “இந்த முறை அதிகாரபூர்வமாக தேர்தல் நடைபெறும் நாளில் வாக்களிப் பதற்கு பதிலாக, கணிசமான வாக்காளர்கள் முன்கூட்டியே தங்கள் வாக்குகளை செலுத்தி உள்ளனர். இது ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் அதிகரிப்பதற் கான அறிகுறியாக இருக்கலாம். முன்கூட்டியே பதிவான வாக்கு களால் ஹிலாரி பயனடை வதற்கான வாய்ப்பு உள்ளது.

முன்கூட்டியே வாக்கு அதிகரித்ததற்கு வெள்ளையின ஆண்கள் காரணம் இல்லை என தெரியவருகிறது. கடந்த தேர் தலுடன் (2012) ஒப்பிடும்போது, வெள்ளையின ஆண்களைவிட வெள்ளையின பெண்களும் ஆப்ரிக்க அமெரிக்கர்களும் அதிக அளவில் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT