அமெரிக்கத் தேர்தலை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ்/சிபிஎஸ் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பின் முடிவில் ஹிலாரி டிரம்ப்பை விட 3% முன்னிலையில் உள்ளார்.
நியூயார்க் டைம்ஸ்/சிபிஎஸ் இன்று (வியாழக்கிழமை) கருத்துக்கணிப்பின் முடிவில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரிக்கு ஆதரவாக 45% பேரும், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப்புக்கு ஆதரவாக 42% பேரும் ஆதரவளித்துள்ளனர்.
ஹிலாரியும், டிரம்ப்பும் மாறி மாறி கருத்துக் கணிப்புகளில் முன்னிலை பெற்று வருவது அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தில் மியாமி நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற டிரம்ப் பேசும்போது, "ஹிலாரி ஒரு நிலையான கொள்கையற்றவர். அவர் அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவில் அரசியல் நெருக்கடி ஏற்படும். ஹிலாரி குற்றப் பின்னணி உடையவர்" என்று சாடினார்.