எல்லையில் பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக இந்திய துணை தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் 5-வது முறையாக பாகிஸ்தான் இவ்வாறாக இந்திய துணை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம், "தெற்கு ஆசியா மற்றும் சார்க் இயக்குநர் முகமது பைசல் இந்திய துணை தூதர ஜே.பி.சிங்கை இன்று நேரில் அழைத்து எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
திங்கள்கிழமை இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட 3 பேர் பலியாகினர். 5 வயது சிறுவன் உட்பட 5 பேர் காயமடைந்தனர்" எனத் தெரிவித்துள்ளது.
முன்னதக கடந்த அக்டோபர் 25, 26, 28 மற்றும் நவம்பர் 1-ம் தேதியும் இந்திய துணை தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியது.
கடந்த மாதம் 27-ம் தேதி பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் அசீஸ் சவுத்ரி இந்திய தூதர கவும் பம்பாவாலேவை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.