ஐ.நா.வில் கடந்த 7-ம் தேதி வளர்ச்சி நடவடிக்கைகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் நிரந்திர உறுப்பினராகும் திட்டத்துக் கான முதல் செயலாளராக நியமிக்கப்பட்ட இந்தியாவின் மகேஷ்குமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஐ.நா. உருவான நாள் முதலாக, இந்தியா அதற்கு தொடர்ந்து நிதி பங்களிப்பு செய்து வருகிறது. அமைதி மற்றும் பாதுகாப்பு, வளர்ச்சி, மனித உரிமைகள் ஆகிய ஐ.நா.வின் 3 முக்கிய தூண் திட்டங்களுக்கு உரிய நிதி ஆதாரம் வழங்கப்படுவது அவசியமானது. வளரும் நாடு என்ற முறையில், இந்தியாவுக்கு வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான சவால்கள் ஏராளமாக உள்ளன. என்றாலும், ஐ.நா.வின் நலத்திட்டங்களுக்காக நிதி பங் களிப்பு செய்வதை எப்பொழுதும் கைவிட்டதில்லை. அந்த வகையில் 2017-ம் ஆண்டில் மொத்தம் ரூ.73.97 கோடி நிதியை ஐ.நா.வுக்கு வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த நிதியை கொண்டு ஐ.நாவின் வளர்ச்சி திட்டம், உலக உணவு திட்டம், நிவாரணத் திட்டம் ஆகிய வற்றை செயல்படுத்த ஊக்கம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.