உலகம்

சிரிய உள்நாட்டுப் போரில் இதுவரை 1000 இரான் வீரர்கள் பலி

ஏஎஃப்பி

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இரான் கூறியுள்ளது.

இது குறித்து இரான் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் அந்நாட்டு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் சிரிய அதிபர் பஷார் ஆசாத்துக்கு ஆதரவாக இரான் தனது படைவீரர்களை அனுப்பியது.

சிரியாவில் நடைபெறும் சண்டையில் இதுவரை, இரான் 1000-க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை இரான் அரசு செய்யும்" என்று கூறினார்.

இந்த நிலையில் சிரிய அதிபர் பஷார் ஆசாத்துக்கு ஆதரவாக இரான் வீரர்கள் சிரிய உள் நாட்டு போரில் பங்கேற்றுள்ளதற்கு இரானில் பொது மக்களிடையேயும், எதிர்க் கட்சிகளிடத்திலும் பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில், சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் பொது மக்கள் 141 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இவர்களில் 18 பேர் பத்து வயதுக்குட்பட்டவர்கள் எனவும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிரிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

அல்-கொய்தாவின் முக்கிய தலைவர் பலி

சிரியாவில் கடந்த வாரம் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் அல்-கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT