உலகம்

இந்திய ராணுவத்தினர் ஊடுருவ வாய்ப்பேயில்லை: துல்லியத் தாக்குதல் குறித்து பாக். ராணுவ அதிகாரிகள்

பிடிஐ, ஏஎஃப்பி

பன்னாட்டு பத்திரிகையாளர்களை இந்திய துல்லியத் தாக்குதல் பகுதிக்கு அழைத்துச் சென்று பாகிஸ்தான் ராணுவம் விளக்கம் அளித்தது.

காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லை பகுதியில் உள்ள காடு அடர்ந்த முகட்டில் உள்ள இந்திய ராணுவ முகாமைக் காண்பித்து இப்பகுதியில் அவர்கள் தங்கள் பகுதிக்குள் ஊடுருவ வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளனர் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்

வியாழனன்று இந்தியா, பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அழித்ததாக இந்திய ராணுவம் கூறியதையடுத்து இந்திய ராணுவத்திற்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவியும் நேரத்தில் சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு பாக். ராணுவ அதிகாரிகள் இந்தியா துல்லியத் தாக்குதல் நடத்திய இடத்தைக் காண்பித்தனர். இப்பகுதியில் பாகிஸ்தான் எல்லையைக் கடந்து இந்திய ராணுவத்தினர் 3 கிமீ தூரம் வரை சென்று தீவிரவாத முகாம்களை அழித்ததாக தெரிவித்தது. இது சாத்தியமேயல்ல என்ற தங்கள் கோரலை நிரூபிக்கும் விதமாக சர்வதேச பத்திரிகையாளர்களை பாக். ராணுவம் அவ்விடத்துக்கு அழைத்து வந்து காட்டியது.

பாகிஸ்தான் அனுமதியில்லாமலேயே அபாட்டாபாத்தில் ஒசாமா பின் லேடனை அமெரிக்க படைகள் கொன்றதற்குப் பிறகு இந்திய ராணுவம் நுழைந்ததே பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது.

தங்களது ராணுவத்தினர் இருவர் பலியானது எல்லையில் நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால்தான், இந்தியா இப்பகுதியில் நுழைந்ததால அல்ல என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில் ஹெலிகாப்டரில் பாக்.ராணுவ அதிகாரிகள் சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்து வந்து கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து 2 கிமீ தொலைவில் வரை அழைத்து வந்து இந்தியா கோரும் ‘சர்ஜிக்கல் ராணுவ நடவடிக்கை’ நடந்ததாக கருதப்படும் இடத்தைக் காண்பித்து விளக்கம் அளித்தனர்.

அப்பகுதியில் மூத்த உள்ளூர் கமாண்டர்கள் மற்றும் பாக்.ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினண்ட் ஜெனரல் அசிம் பஜ்வா ஆகியோர் இருந்தனர். இந்த அசிம் பஜ்வாதான் இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு ஊடக ஆளுமையாகத் திகழ்ந்து வருகிறார்.

எல்லைக் கிராமமான மந்த்ஹோலில் தினசரி வாழ்க்கை எந்தவித தொந்தரவுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய பஜ்வா, கடைகள், வர்த்தக நிலையங்கள் திறந்திருப்பதையும் சகஜமான வாழ்க்கை இருப்பதையும், குழந்தைகள் சீருடையுடன் பள்ளிக்குச் செல்வதையும் காட்டினார்.

“இப்பகுதியின் வடிவமைப்பைப் பார்க்கிறீர்கள் இல்லையா” என்று பஜ்வா பத்திரிகையாளர்களுக்கு விளக்கினார். “பாதுகாப்பு அரண்கள் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்களே பார்க்கலாம். பாகிஸ்தான் பல அடுக்கு பாதுகாப்பு அரண் வைத்துள்ளது, அவர்களும் பல அடுக்கு அரண் வைத்துள்ளனர். கட்டுபாட்டு எல்லையை யாரும் மீற முடியாது.

என்வே இந்திய ராணுவம் எங்கள் பகுதியில் சேதம் ஏற்படுத்தியிருந்தால், அப்படி சேதம் ஏற்பட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் இங்கு வசிக்கும் மக்களை சந்தித்துக் கேளுங்கள், எங்கள் பகுதி ஐநா மிஷன், ஊடகங்கள், பொதுமக்கள் என்று அனைவருக்கும் திறந்துதான் உள்ளது” என்றார்.

ஆனால் பஜ்வாவின் கோரல்களை சரிபார்க்க சாத்தியங்கள் இல்லை என்றாலும் கிராமத்தினர் ஏ.எஃப்.பி. செய்தியாளர்களிடம் பேசும்போது (இவர்கள் பேசும்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இல்லை) அவர்களுக்கும் தாக்குதல் குறித்த நம்பிக்கையில்லாத போக்குதான் தெரிந்தது.

காஷ்மீரி செய்தி வட்டாரங்களின் 37 வயது பத்திரிகையாளர் சர்தார் ஜாவேத், இவர் தத்தா பானி செக்டாரில் வசித்து வருகிறார். அன்று நடந்த தாக்குதல்களில் ஒன்று இப்பகுதியில் நடந்ததே. இவர் கூறும்போது இந்திய ராணுவத் தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்கிறார்.

"நான் அது உண்மையல்ல என்று கூறவில்லை, ஏனெனில் அது ராணுவத்தினரின் கோணம். நான் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் இருக்கிறேன், பத்திரிகையாளன் எனவே இங்கு தாக்குதல் நடந்திருந்தால் செய்திகள் வெகுவேகமாகப் பரவும். எது நடந்தாலும் மக்களுக்கு உடனடியாகத் தெரிந்து விடும்” என்று கூறுகிறார்.

SCROLL FOR NEXT